றம்புக்கனை பொலிஸ் நிலையத்திலிருந்து ஐவர் தப்பியோட்டம்




றம்புக்கனை பொலிஸ் நிலைய சிறையில் வைக்கப்பட்டிருந்த ஐவர் நேற்று இரவு தப்பிச் சென்றுள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று மாலை குறித்த சந்தேக நபர்கள் குடாகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபரை சிறையிலடைக்க பொலிஸார் முயற்சித்தபோது, பொலிஸ் அதிகாரியைத் தாக்கிவிட்டு குறித்த சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

தப்பிச்சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.