வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடனான விசேட ரயில் ஒன்று கொழும்பு கோட்டையில் இருந்து கிளிநொச்சிக்கு செல்ல உள்ளது.
இந்த ரயில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அங்கு செல்லவுள்ளது.
வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான முன்னெடுக்கப்படும் நிவாரண வேலைத் திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்த ரயில் சேவை இடம்பெறவுள்ளது.
மக்கள் தேவையான நிவாரணப் பொருட்களை இந்த ரயிலிடம் ஒப்படைக்க முடியும். றாகம, கம்பஹா, வெயாங்கொட, மீரிகம, பொல்கஹவெல, குருநாகல், கணேவத்த, மாஹோ, கல்கமுவ, அனுதாரபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் மக்கள் தமது நிவாரணப் பொருட்களை கையளிக்கலாம்.
இலங்கை ரயில்வே திணைக்களம் - ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment