மெத்தியூஸ் பங்கேற்கார்




இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நியூசிலாந்து அணியுடன் கிறைஸ்ட்சேர்சில் இடம்பெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் 2 வது இன்னிங்ஸில் ஓட்டங்களைப் பெறும் போது காயமடைந்த அஞ்சலோ மெத்தியூஸ், ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 

இந்நிலையில், அஞ்சலோ மெத்தியூஸின் இடது தொடையில் ஏற்பட்ட உபாதையால் அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.