சிறுபான்மையினரோடு முரண்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை பிரமராக்கியது, சிறுபான்மையினருக்கு, மைத்திரிபால சிறிசேன செய்த துரோகமாகுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை, மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் அகியன ஒழுங்கு செய்த “ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மக்களின் கடமைப்பாடாகும்” எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கும் கலந்துரையாடலும், மட்டக்களப்பு கூட்டுறவுக் கேட்போர் கூடத்தில் இன்று (16) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதிக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடுகள், ஒரு நாட்டின் ஜனநாயக அரசியலை சீரழித்திருப்பதாகத் தெரிவித்தார்.
இதனால் நாட்டு மக்கள் பல இழப்புகளைச் சந்தித்துள்ளார்கள் எனச் சுட்டிக்காட்டிய அவர், இந்த அரசியல் சீரழிவால் ரணிலோ, மைத்திரியோ பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதுபோன்றதொரு நிலைமை நாட்டில் இனி ஒருபோதும் ஏற்பட்டு விடக் கூடாத வகையில், நியாயமான அரசாங்கத்தை ஏற்படுத்துவதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் நடைபெற்ற விரும்பத் தகாத விடயங்கள் எங்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment