(க.கிஷாந்தன்)
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மீண்டும் அமைச்சு பதவியை ஏற்றுள்ளதன் முகமாக அவரை வரவேற்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
அந்தவகையில், அட்டன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 23.12.2018 அன்று அவரை ஆதரவாளர்கள் அமோக வரவேற்புடன் வரவழைத்தனர்.
அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளிலும் அமைச்சர் கலந்து கொண்டார். அதன்பின் அமைச்சர் திகாம்பரத்துடன் பெருந்திரளமான மக்கள் ஊர்வலமாக அட்டன் மணிகூட்டு கோபுரம் வரை சென்றனர். அதனைதொடர்ந்து அங்கு அமைச்சர் திகாம்பரம் தலைமையில் விசேட கூட்டமும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், முன்னாள் அட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் நந்தகுமார் என பல உறுப்பினர்கள், ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment