களப் பணியில் பாலித்த தேவப்பெரும,அறிக்கை விடும் அரசியல்வாதிகளுக்கு




வடக்கில் அண்மைய வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு உதவே வேண்டும் என்று, அடிக்கடி தமிழ் அரசியல்வாதிகள் அங்கப் பிரதஸ்டை செய்கின்றனர்.
அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லையென்று குற்றமும் சுமத்துகின்றனர்.

பாதிப்புற்ற மக்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டு, செல்பி எடுத்து முகநுாலில் பதிவேற்றுகின்றனர் இன்னுமொரு கூட்டம்.

ஆனால், இவற்றுக்கப்பால், களத்தில் இறங்கி மக்களின் தேவையை உணர்ந்து கிணற்றை துப்புரவு செய்யும் அமைச்சர் பாலித தேவப்பெரும வடக்கில் மட்டுமல்ல,அளுத்கமயில் 2014 இல் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கலவரங்களின் போது, பாதிப்புற்றோரை, தமது சொந்த வாகனத்தில் ஏற்றிச் சென்று காப்பாற்றிய நாடாளுமன்ற அங்கத்தவர் என்பது குறிப்பிட்தக்கது.