நாளைமறுதினம் 26 ஆம் திகதி நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளன.
கடந்த தினங்களில் ஏற்பட்ட எரிபொருள் விலை மாற்றத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பஸ் கட்டணங்கள் நூற்றுக்கு 4 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது.
குறைந்த பட்ச கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
இதேவேளை, ஓட்டோ கட்டணமும் குறைக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில் ஆரம்ப கட்டணம் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, 60 ரூபாவாக இருந்த ஆரம்ப கட்டணம் 50 ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துக் கட்டணமும் குறைக்கப்படவுள்ளது எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
நூற்றுக்கு 3 வீதத்தால் குறித்த கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளன.
குறித்த அனைத்துக் கட்டணங்களும் நாளைமறுதினம் 26ஆம் திகதி நள்ளிரவு முதல் குறைக்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment