மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் 13 பேரின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
வாழைச்சேனை பிரதேச சபையின் 2019 ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தவிசாளர் சி.கோணலிங்கத்தால் சமர்ப்பிக்கப்ட்டது.
இவ் வரவு செலவு திட்டமானது வாகரை பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து பிரதேச மக்களினதும் தேவைகளை முன்னுரிமைபடுத்தியதான விசேட வேலைத் திட்டங்களை உள்ளடங்கிய வரவு செலவு திட்டம் என்பதை ஏற்றுக் கொண்ட பிரதேச சபை உறுப்பினர்கள் 13 பேரின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஆளும் கட்சி உறுப்பினர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பு 05 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்ச்சியைச் சேர்ந்த 03 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 02 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த 01 உறுப்பினரும், சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த 02 உறுப்பினருமாக 13 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
இதில் எதிர்கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 05 உறுப்பினர்;கள் எதிராக வாக்களித்தனர். அத்தோடு எதிர்கட்சியாக இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த ஒருவரும், சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த இருவரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இவ்வரவு செலவுத் திட்டத்தில் மொத்த வருமானம் 71,652,000 ரூபாவில் 2019ம் ஆண்டுக்கான மொத்த செலவாக 71,651,000 ரூபாய் எனவும், என்னால் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு நன்றிகளையும் தவிசாளர் சி.கோணலிங்கம் தெரிவித்தார்.
இதில் நிதிக்குழுவில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்கள் மற்றும் விசேட சபை அமர்வின் போது கருத்துக்களை முன்வைத்த உறுப்பினர்களின் கருத்துக்கள் உள்வாங்ப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்த போதும் குறிப்பிட்ட உறுப்பினர்கள் அடங்கலாக 05 வாக்குகள் எதிராக வாக்களிப்பட்டன.
(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)

Post a Comment
Post a Comment