ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு பாராட்டு




அரசியல் நெருக்கடிக்கு அமைதியாகவும் ஜனநாயக ரீதியிலும் அரசியலமைப்பு உட்பட்ட வகையிலும் தீர்வு காணப்பட்டுள்ளமையை பாராட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் அரசியல் நிலைமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிக்கு அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியில் தீர்வு பெறப்பட்டுள்ளமையானது இலங்கையுடனான நிரந்தர உறவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடத் தூதுவர்கள், நோர்வே தூதுவர் ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சபையால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது