வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தில்




வேலையற்ற பட்டதாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லோட்டஸ் சுற்று வட்டப் பகுதியில் வைத்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இவ்வாறு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையிலிருந்து ஜனாதிபதி செயலகத்துக்கு பேரணியாக செல்வதற்கு முற்பட்டுள்ளனர்.
பேரணியாக செல்லும் முயற்சியில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை, பொலிஸார் தலையிட்டு தடுத்து நிறுத்த முற்பட்ட வேளையில் இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது.