காத்தான்குடியில் பாடசாலைச் சீருடை கூப்பன்கள் நாளை முதல்




(ஏ.எல்.டீன்பைரூஸ்)
காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள சகல பாடசாலை மாணவர்களுக்குமான சீருடை வவுச்சர்கள் நாளை முதல் வினியோகம்
காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள சகல பாடசாலை மாணவர்களுக்குமான இலவச சீருடை வவுச்சர் (18.12.2018 செவ்வாய்) இன்று முதல் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிமனையூடாக வலயத்தின சகல பாடசாலை அதிபர்களிடம் வழங்கப்படுவதாக காத்ததான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் தெரிவித்தார்.
நாடு பூராகவுமுள்ள கல்விப் பணிமனையூடாக பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.