(க.கிஷாந்தன்)
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 5 ஆவது தடவையாகவும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமர் பதவியேற்றதையடுத்து, 16.12.2018 அன்று அட்டனில் இதனை மகிழ்விக்கும் முகமாக ஆராவாரம் செய்யப்பட்டது.
இதன்போது நகரில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு அணைவரும் மகிழ்ச்சியடைந்ததோடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உருவ படங்களை ஏந்தி கோஷமிட்டு கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்வின் போது, அட்டன் டிக்கோயா நகர சபையின் உப தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள், நகரவாசிகள் என பலரும் ஆரவாரத்தில் ஈடுப்பட்டனர்.
இதன்போது அட்டன் நகரத்தில் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
Post a Comment
Post a Comment