இலங்கைக்கு இலக்கு 636 ஓட்டங்கள்





இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் 2 வது மற்றும் கடைசி கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறுகிறது. 

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. 

இதன் அடிப்படையில் தமது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 

இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 5 விக்கெட்டுக்களையும் லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

நியூசிலாந்து அணி சார்பாக டிம் சௌத்தி அதிகூடிய ஓட்டங்களாக 68 ஓட்டங்களை பெற்றார். 

இந்நிலையில் தமது 1 ஆவது இன்னிங்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது. 

இலங்கை அணி சார்பாக மெத்தியூஸ் அதிகூடிய ஓட்டங்களாக 33 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார். 

நியூசிலாந்து அணி சார்பாக டெரன்ட் பொள்ட் 6 விக்கெட்டுக்களையும் டிம் சௌத்தி 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இதன் அடிப்படையில் தமது 2 வது இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 585 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது. 

நியூசிலாந்து அணி சார்பாக டொம் லதெம் 176 ஓட்டங்களையும் ஹென்றி நிகலஸ் ஆட்டமிழக்காது 162 ஓட்டங்களையும் பெற்றனர். 

இலங்கை அணி சார்பாக லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இந்நிலையில் 660 ஓட்டங்களை பெற்றால் இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் என்ற நிலையில் தற்போது தனது 2 வது இன்னிங்சை துடுப்பெடுத்தாடி வருகிறது.