ரணில் விக்ரமசிங்க, 5 வது முறையாக, இலங்கையின் பிரதமரானார்

#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று 5 ஆவது தடவையாகவும் பிரதமராக  சற்று முன்னர்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவி ஏற்றுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe, சிங்களம்: රනිල් වික්‍රමසිංහ, பிறப்பு: 24 மார்ச் 1949) இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதமரும் ஆவார். இவர் 2015 முதல் பிரதமராகப் பதவியில் உள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994 முதலும், 1977 முதல் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகவும் உள்ளார்.

விக்கிரமசிங்க 1993 முதல் 1994 வரையிலும், 2001 முதல் 2004 வரையிலும், 2015 01/8 - 2015 /8/ வரையிலும் 2015ஓகஸ்ட் இல் இருந்து 2018 வரையிலும் இலங்கையின் பிரதமராகப் பதவியில் இருந்துள்ளார். 1994 இல் காமினி திசாநாயக்கா படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சனவரி, 2015ஆம் ஆண்டில் இலங்கை சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன தனது 100-நாள் நல்லாட்சி வேலைத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் பிரதமராக நியமித்தார்.இது ஒகஸ்ட் மாதம் வரை நீடித்தது.

2015 ஆகத்தில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஆனாலும், அது அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறியது. ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் செய்துகொண்ட இரண்டாண்டு உடன்படிக்கையை அடுத்து ரணில் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

விக்கிரமசிங்கவின் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 106 இடங்களைக் கைப்பற்றியது. 113 என்ற அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், இலங்கை சுதந்திரக் கட்சியின் 35 உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் மூலமும், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்ததை அடுத்தும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்தார்

2018ல் அக்டோபர் 26 இல் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றி, அவருக்குப் பதிலாக முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவைப் பிரதமராக நியமித்தார்.

ராசபக்சவின் நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி விக்கிரமசிங்க இதனை ஏற்கவில்லை. இதனால் இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியை சந்தித்தது.2018 டிசம்பர் 16 இல் இவர் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பது இது 5ஆவது முறையாகும்.

இன்று ஐந்தாவது முறையாக ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றிருந்தாலும், இதுவரை முழுமையாக ஐந்து வருடங்கள் பிரதமர் பதவியை வகித்ததில்லை.

ரணில் விக்மசிங்க முதன்முறையாக 1993ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். ஆனால் 1994ஆம் ஆண்டு வரை மட்டுமே அவர் அந்தப் பதவியில் நீடித்தார்.

2001ஆம் ஆண்டு இலங்கையின் 17ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருந்தார். எனினும், 2004ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகள் மட்டுமே பதவி வகிக்க முடிந்தது.

இதன்பின்னர், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அணியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவைப் பிரித்தெடுத்து ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

இந்தத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வெற்றிபெற்ற பின்னர், ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார் என்று தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் தேதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற நிலையில், ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதன்பின்னர் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 106 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.

கடந்த மூன்று வருடங்களாக தேசிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டிருந்தது.

1949ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி பிறந்த ரணில் விக்ரமசிங்க, 1977ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். 1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்ற அவர், இன்றுவரை அந்தக் கட்சியின் தலைவராக செயற்பட்டு வருகிறார்.

2001ஆம் ஆண்டு இலங்கையின் 17ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருந்தார். எனினும், 2004ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகள் மட்டுமே பதவி வகிக்க முடிந்தது.

இதன்பின்னர், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அணியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவைப் பிரித்தெடுத்து ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

இந்தத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வெற்றிபெற்ற பின்னர், ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார் என்று தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் தேதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற நிலையில், ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதன்பின்னர் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 106 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.

கடந்த மூன்று வருடங்களாக தேசிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டிருந்தது.

1977ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். 1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்ற அவர், இன்றுவரை அந்தக் கட்சியின் தலைவராக செயற்பட்டு வருகிறார்.