பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை சட்ட விரோதமானது என தெரிவித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவி உள்ளிட்ட அமைச்சரவை சட்ட விரோதமானது என தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட 122 எம்.பி கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையிலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு எதிர்வரும் 12ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மனு எதிர்வரும் 12ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment