#DUBAI.
அமீரகத்தில் வரலாறு காணாத மாபெரும் Futsal சுற்றுப்போட்டி - மாவனல்லை ஸாஹிரா அமீரக கிளை
மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்களின் அமீரகக்கிளை ஏற்பாட்டில் ஏனைய பாடசாலை பழைய மாணவர் சங்கங்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்து போட்டி (Futsal Tournament 2018) நேற்று வெள்ளிக்கிழமை (09.11.2018) Bilva Indian School Dubai, UAE மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் அமீரகத்தில் உள்ள இலங்கையின் மிக முக்கிய பாடசாலைகளின் அமீரகக்கிளை பிரிவுகள், இலங்கை சார் ஒன்றியங்கள் மற்றும் இலங்கை சார்ந்த பல அணிகள் கலந்து சிறப்பித்தனர்.
‘Zahira College, Mawanella, UAE Branch’ அமைப்பின் விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மேற்படி புட்சல் கால்பந்து போட்டியின் அறிமுக நிகழ்வு கடந்த 2.11.2018 அன்று Holiday Inn Express Dubai Airport Hotel வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Futsal Tournament 2018 ஐ சிறப்பிக்க, மாவனல்லை ஸாஹிரா பாடசாலையின் பிரதி அதிபர் Mr. Nizam (Vice Principal - Sports) மற்றும் Mr. Iqbal (President - Serendib Sports Club) இலங்கையிலிருந்து வந்து கலந்து சிறப்பித்தனர்.
லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் சுமார் 16 அணிகள் பங்கேற்றதுடன், நான்கு பிரிவுகளாக குழுக்கள் அமைக்கப்பட்டு இரண்டு மைதானங்களில் போட்டிகள் மிகச்சிறந்த முறையில் நடைபெற்றன.
தகவல் : Mr. Shamran Nawaz
Post a Comment
Post a Comment