குயின்ஸ்பெரி கிளை ஆற்றிலிருந்து,ஆணின் சடலம்




(க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயின்ஸ்பெரி கீழ்பிரிவில் உள்ள கிளை ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் 07.11.2018 அன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்பெரி தோட்டத்தில் உள்ள 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடேசன் அரிகிருஷ்ணசாமி என்பவரின் சடலமே இது என அவரின் உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

வெளியே சென்ற இவர் 06.11.2018 அன்று இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் இவரை காணவில்லை. இந்த நிலையில் ஆற்றில் ஒருவரின் சடலம் மிதப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சென்று பார்த்த பொழுது இவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் நீதவான் அவ்விடத்திற்கு வருகை தந்த பின்னர் சடலம் கரைக்கு கொண்டுவரப்பட்டது. இதன்பின்னர் நீதவானால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

சடலம்  நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இம் மரணம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.