வெள்ளத்தில் அள்ளுண்டது




வெள்ளத்தில் அள்ளுண்ட குழாய்நீர்விநியோக குழாய்.
மாவடிப்பள்ளிக்கான குழாய்நீர் விநியோகம் பாதிப்பு.
காரைதீவு நிருபர் சகா
கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

காரைதீவு மாவடிப்பள்ளியில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட பாலமருகே தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையால் அமைக்கப்பட்ட குழாய்த்தொகுதியொன்று வெள்ளத்தினால் அள்ளுண்டது.
இதனால் இன்று காரைதீவிலிருந்து மாவடிப்பள்ளிக்கான குழாய்நீர் விநியோகம் பாதிகப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் காரைதீவுபிரதேச நிலைய பொறுப்பதிகாரி விஜயரெத்தினம் விஜயசாந்தனிடம் கேட்டபோது அதனை ஊர்ஜிதம் செய்தார்.

அவர் இது தொடர்பபாக விபரிக்கையில்..
வெள்ளத்தில் வந்த ஆற்றுவாழை உள்ளிட்டநீர்த்தவரங்களின் விசையால் இக்குழாய்கள் தகர்க்கப்பட்டுள்ளன.

இங்கிருந்த ஒரு குழாய்த்தொகுதி ஏலவே கைவிடப்பட்டுக்கிடந்தவை.
எனினும் மறுகுழாய்த்தொகுதி காரைதீவு நீர்த்தாங்கியிலிருந்து மாவடிப்பள்ளிக்கு நீர் எடுத்துச்செல்வது. இக்குழாய் பாதிக்க்கப்பட்டுள்ளது.

அதனால் மாவடிப்பள்ளிக்கான நீர்விநியோகம் தடைபட்டுள்ளது. எனினும் சம்மாந்துறையிலிருந்து மாவடிப்பள்ளிக்கான நீர் தற்போது தற்காலிகமாக வழங்கப்பட்டுவருகின்றது.

தற்போது முதலைகள் அங்கு பெருமளவிலிருப்பதனால் உடனடியாக திருத்தவேலை செய்யமுடியாதுள்ளது.
வெள்ளம் வடிகின்ற பட்சத்தில் இக்குழாய்நீர்விநியோகம் வழமைக்குத்திரும்பும் என அவர் மேலும் சொன்னார்.