திருகோணமலையில், மின் துண்டிப்பு




திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மற்றும் கந்தளாய் தவிர்ந்த ஏனைய இரண்டு நாட்களுக்கு மின்தடை ஏற்படவுள்ளது. 

அத்தியவசிய திருத்த வேலை காரணமாக இவ்வாறு மின் துண்டிப்பு இடம்பெற உள்ளதாக இலங்கை மின்சார சபையின் திருகோணமலை பிராந்திய காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அதன்படி நாளையும், நாளை மறுநாளும் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

திருகோணமலை நிருபர் கீத்