தொல் திருமாவளவனை சந்தித்த விக்னேஸ்வரன்




வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரனை இந்தியாவின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். 

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழில் நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக திருமாவளவன் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். 

இதனையடுத்து இன்று காலை கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் மரங்கள் நாட்டும் நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்து மரங்களை நாட்டி வைத்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் வாசஸ்தலம் சென்று அவரைச் சந்தித்து கலந்துரையாடினார். 

இதன் போது திருமாவளவனுக்கு பொன்னாடை போர்த்த்தி கௌரவித்து நினைவுப் பரிசொன்றையும் விக்னேஸ்வரன் வழங்கியிருந்தார். 

(யாழ். நிருபர் பிரதீபன்)