( அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியா பாலத்திற்கு கீழ் உள்ள கொங்கிரீட் தூணில் தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் (இன்று 10ஆம் திகதி) பிற்பகல் மூன்று முப்பது மணி அளவில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா 3 பிரதான வீதியை சேர்ந்த யாக்கூப் ஹாரி முஹீத் (18 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது தனது சக நண்பர்களுடன் விடுமுறை தினமான இன்று தூண்டிலில் மீன் பிடிப்பதற்காக கிண்ணியா பாலத்திற்கு கீழே உள்ள கொங்கிரீட் டோனி நின்றுகொண்டு தூண்டல் தூண்டில் வீசிக் கொண்டிருந்த போது தவறுதலாக விழுந்ததிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞரை தேடும் பணியில் பிரதேச மக்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment