#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
அக்கரைப்பற்று-03ஆம் குறிச்சி, முதலியார் வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட, ஓய்வுபெற்ற ஆசிரியர் பஸீர் (ஜெமீல்) இன்று (09) வெள்ளிக்கிழமை மாலை காலமானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரி உட்பட நாட்டின் பல்வேறுபட்ட இடங்களில், ஆங்கில ஆசரியாராகப் பணிபுரிந்தவர்.சமூக சேவையில் தன்னை முழு வீச்சாக களம் இறங்கியவர்.
வறிய மாணவர்களும் கணிணியனைப் பயில வேண்டுமென்பதற்காக கணிணி கற்கை நெறியினைப் போதித்தவர். சுனாமி வீட்டுத் திட்டத்தை உரியவர்கள் பெற்றுக் கொள்வதற்காக பல முயற்ச்சிகளை மேற்கொண்டவர். அக்கரைப்பற்றில் அடிதடி அரசியல் கலாச்சாரம் முற்றுப் பெற வேண்டும், நாகரீக அரசியல் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டியவர்.அதனடிப்படையில் நல்லாட்சிக்காக தேசிய முன்னணியில் இணைந்தவர். ஜமாஅதே இஸ்லாமியின் ஆரம்ப கால அங்கத்தவர்.
இவர் சக்கர்தம்பி விதானையின் புதல்வரான இவர், கண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை றைஹான பீவியின் கணவரும், இர்பானா அவர்களின் அன்பு தகப்பனாரும், ரிபின் (C.E.B) இனது மாமனாரும் , எகீன் சேர், காலீத் சேர், அமீர் சேர் ஆகியோர்களின் சகோதரரும் ஆவார்.
யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்.
Post a Comment
Post a Comment