மோசடிகளை செய்ய அனுமதிப்பத்திரம்




தற்போது அரசியல் ஒரு வியாபாரமாக மாறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

கண்டி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி பதவியானது தற்போது மோசடிகள் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பிரதமர் முதல் அமைச்சர்கள் வரையில் மோசடிகள் செய்ய பழக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் தற்போது அரசியல் வியாபாரமாக மாறியுள்ளதாகவும் அது மக்கள் சேவையாக மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.