(க.கிஷாந்தன்)
ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி கொட்டகலை நகரில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நகர வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி, வேன் சாரதிகள், இளைஞர், யுவதிகள் என பலரும் ஒன்றிணைந்து 25.10.2018 அன்று காலை அட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு உடன்படிக்கை தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்த நிலையில், கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக அணிதிரண்ட கொட்டகலை பிரதேச தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக கொட்டகலை வூட்டன் நகருக்கு வந்து பிரதான வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பதாதைகளையும், கறுப்பு கொடிகளையும் ஏந்திய வண்ணமும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாடத்திற்கு கொட்டகலை நகர வர்த்தகள் தங்களது வியாபார நிலையங்களை மூடி ஆதரவு வழங்கியதோடு, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.
Post a Comment
Post a Comment