(க.கிஷாந்தன்)
லிந்துலை - எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெராயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத்தரக் கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் 17.10.2018 அன்று மதியம் மெராயா – தலவாக்கலை பிரதான வீதியில் மெராயா நகரத்தில் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் இவ்வீதியினூடான போக்குவரத்து சில மணி நேரம் ஸ்தம்பிதமடைந்திருந்தது.
எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதோடு, பதாதைகளையும் ஏந்தி நகரத்தில் பேரணியாக சென்றதோடு, தொழிலாளர்களுக்காக மெராயா நகரத்தில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டு ஆதரவை தெரிவித்தனர்.
கம்பனிகாரர்களுக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம் என கோஷத்தை எழுப்பியவாறு, பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்த விடயத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு முடிவு கிடைக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்
Post a Comment
Post a Comment