(க.கிஷாந்தன்)
தோட்டத் தொழிலாளர் தமது அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவினால் அதிகரிக்கக் கோரி மலையகமெங்கும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்ட பேரணிகள் நடந்த வண்ணமே உள்ளன.
அதற்கமைய 18.10.2018 அன்றும் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வேறு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. டயகம - தலவாக்கலை பிரதான வீதியின் திஸ்பனை சந்தியிலும் லிந்துலை நகரிலும் இரு வேறு ஆர்ப்பாட்டங்களில் பெருந்திரளான தோட்டத் தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
இவர்கள் சம்பள உயர்வு கோரி பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
திஸ்பனை சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினால் தலவாக்கலை - டயகம மற்றும் தலவாக்கலை - எல்ஜின் வீதி ஊடான போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்தது. இவ் ஆர்ப்பாட்டத்தில் செலிடோனியா, ஹென்போல்ட், கெளலினா, வாழமலை, திஸ்பனை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதே போல் கொடும்பாவிகளும் எறியூட்டப்பட்டன.
அத்தோடு, லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மட்டுக்கலை, லென்தோமஸ், லெமினியர், கொனன், வோல்றீம் ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்த்தில் 600 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக அட்டன் - நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்திற்கும் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
Post a Comment
Post a Comment