சம்மாந்துறை கோரக்கர் பல்கலைக்கழக மாணவர் சமுகசேவை ஒன்றியம் 'விழுதுகளின் சங்கமம்' என்ற நிகழ்வை (28) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் நடாத்தவிருக்கிறது.
ஒன்றியத்தலைவர் சோ.தினேஸ்குமார் தலைமையில் 'வித்திட்ட முற்றத்தில் வேர்களின் எழுச்சி' என்ற மகுடத்தின்கீழ் நடைபெறவிருக்கும் இவ்விழாவில் பிரதமஅதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ்.மௌனகுரு கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.
கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் உதவிக்கல்விப்பணிப்பாளர்களான வி.ரி. சகாதேவராஜா பி.பரமதயாளன் கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கே.மோகனதாசன் உள்ளிட்ட மற்றும் பலர் சிறப்பு நட்சத்திர அதிதிகளாகக் கலந்துசிறப்பிக்கவிருக்கின்றனர் .
கிழக்குப்பல்கலைக்கழக மாணவனாகவிருந்த சோ.தினேஸ்குமார் எழுதிய 'ஜக்கம்மா' என்ற ஆய்வுநூல் அறிமுகம் செய்துவைக்கப்படவுள்ளது.
மாணவர்களுக்கான கற்றலுபகரணங்கள் வழங்கப்படும் அதேவேளை 'ஈழத்தின் இளம் கண்டுபிடிப்பாளன்' எனும் ஆவணப்படம் வெளியிட்டுவைக்கப்படவுள்ளது.
கூடவே சாதனையாளர் கௌரவிப்பும் இடம்பெறவிருக்கிறது.
Post a Comment
Post a Comment