கணவன் வெளிநாட்டில் விபத்தில் உயிரிழப்பு,உள்நாட்டு விபத்தில் மனைவி உயிரிழப்பு




கெகிராவ - தம்புள்ள பிரதான வீதியின் மடாடுகம பகுதியில் வேன் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மெலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். 

நேற்று (23) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார தெரிவிக்கின்றனர். 

கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேகம்பஹ பகுதியை சேர்ந்த ஆப்தீன் இஷாக் தீன் எனும் 58 வயதுடைய ஒருவரும் நூர்தீன் சமீரா உம்மா என்று 46 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

கெகிராவ பகுதியில் இருந்து தம்புள்ள திசையில் பயணித்த சிறிய ரக லொறி ஒன்றும் தம்புள்ளயில் இருந்து கெகிராவ திசையில் பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நெர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. 

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களில் இரு குழந்தைகளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் உயிரிழந்துள்ளதுடன் அவரது சடலத்தை அந்நாட்டிலேயே அடக்கம் செய்யுமாறு தெரிவிப்பதற்காக தூதரகத்திற்கு சென்று திரும்பி வரும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் கெகிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.