அம்பாரை நோக்கி வந்த பஸ் விபத்து




ஹம்பாந்தோட்டை- வெல்லவாய பிரதான வீதியில், லுனுகம்வெஹர பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 50 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து இன்று (12) மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

மாத்தறையில் இருந்து அம்பாறை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் தெஹியத்தகண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற இ.போ.ச. பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் இரண்டு பஸ்களினதும் சாரதிகள் உட்பட 50 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

லுனுகம்வெஹர பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்