பெண் வைத்தியர் பிணையில் விடுதலை




பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தையடுத்து கைது செய்யப்பட்ட பெண் வைத்தியரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நுகேகொட நீதவான் நீதிமன்ற நீதிபதி வசந்த குமார இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

05 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த செப்டம்பர் மாதம் 30ம் திகதி பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் கார் ஒன்றும் ஜீப் ரக வாகனம் ஒன்றும் மோதியதில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்தார். 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 39 வயதுடைய பெண் வைத்தியர் வாகனத்தை செலுத்தும் போது மது போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்ததுடன், வைத்திய அறிக்கையில் அவர் மது அருந்தியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.