திறப்பு விழா




(க.கிஷாந்தன்)
நுவரெலியா வைத்தியசாலையின் தாதிமார்களின் விடுதி தொகுதி மற்றும் கிளினிக் அறைகள், சிறுவர் பராமரிப்பு நிலையம் என்பன 06.10.2018 அன்று திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் திறந்து வைக்கப்பட்ட இந்த கட்டிட தொகுதிகள் நவீன வசதிகளுடன் காணப்படுகின்றது.
இதன்போது மேற்படி வைத்தியசாலையில் நிலவுகின்ற ஏனைய குறைபாடுகளை கேட்டறிந்துக் கொண்ட  அமைச்சர், அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம், வைத்திய அதிகாரிகள், தாதிமார்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.