புதிய செயலாளராக




கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எம்.வை.சலீம் இன்று(8) திங்கட்கிழமை பதவியேற்கிறார்.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராகவிருந்த எம்.வை.சலீம் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகல்லாகமவினால் இப்புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
காரைதீவு மாளிகைக்காட்டைச்சேர்ந்த ஜனாப் சலீம் இன்று திருமலையிலுள்ள பொதுச்சேவை ஆணைக்குழுக்காரியாலயத்தில் பதவியேற்கவிருக்கிறார்.
கிழக்கு மாகாணத்தில் இப்பதவிக்கு முதல்தடவையாக நியமிக்கப்பட்ட தமிழ்பேசும் அதிகாரி ஜனாப் சலீம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக மட்டக்களப்பு மாநகசபை ஆணையாளர் கே.மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டு. மாநகசபை ஆணையாளராக உதவி உள்ளுராட்சி ஆணையாளராகவிருந்த  தா.சித்திரவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.


Attachments area