இறைச்சிக்காக பசு மாடை கொண்டு சென்றவர் கைது




(க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பத்தனை பகுதியில் அனுமதி பத்திர விதி முறைகளை மீறி இறைச்சிக்காக பசு மாடு ஒன்றை கெண்டு செல்லும் போது  கைது செய்யப்பட்ட லொறி சாரதி மற்றும் பசு மாடும் 10.10.2018 அன்று அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

10.10.2018 அன்று காலை  அனுமதி பத்திர விதிமுறைகளை மீறி கொட்டகலையிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு இறைச்சிக்காக குறித்த மாடை ஏற்றிச் சென்று கொண்ருந்த போது கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக தலவாக்கலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணைகளின் பின் லொறி மற்றும் மாடுடன் சாரதியும் அட்டன் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.