மாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு




கலேவல பிரதேசத்தில் மாத்திரையை உட்கொள்ளும் போது தொண்டையில் சிக்கியதால் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார். 

நேற்று இரவு சிறுவனின் தொண்டையில் மாத்திரை ஒன்று சிக்கியுள்ளதால் கலேவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளான். 

கலேவல ஜயதிலக மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவனே உயிரிழந்துள்ளான். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.