தெரிந்து கொள்ளுங்கள்,ஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா?




உங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொருட்களை திருடிக்கொண்டு செல்வது, சாலையிலோ, வேறெங்கோ செல்லும்போது பொருட்களைபணத்தை பறித்துக்கொண்டு செல்வதைவிட உங்களது கணினியில், சமூக இணையதளங்களில் நீங்களோ, குறிப்பிட்ட இணையதளமோ பதிவு செய்து வைத்துள்ள தரவுகள் திருடப்பட்டால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் செயல்பட்டால் 50 மில்லியன் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பறிபோனது; பேஸ்புக்கின் அலட்சியமான செயல்பட்டால் சமீபத்தில் இன்னொரு 50 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன; உங்களுக்கே தெரியாமல் உங்களது ஃபேஸ்புக் கணக்கிலிருந்து உங்களது நண்பர்களுக்கு ஆபாச காணொளிகள் செல்வது, நேர மேலாண்மையில் ஏற்படும் பிரச்சனை - அழுத்தம் என ஃபேஸ்புக்கிலிருந்து நிரந்தரமாக வெளியேறுவதற்கு ஒவ்வொருவராலும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஃபேஸ்புக் கணக்கை நீக்குவதற்கும், தற்காலிகமாக முடக்குவதற்கும் என்ன வித்தியாசம்? அதை எப்படி செய்வது? அதனால் ஏற்படும் விளைவுகளை விளக்குகிறது இந்த கட்டுரை.
உங்களது ஃபேஸ்புக் கணக்கை தற்காலிகமாக/ நிரந்தரமாக நீக்குவது எப்படி?படத்தின் காப்புரிமைMYELLA
"நான் ஒரு வாரத்திற்கு/ ஒரு மாதத்திற்கு/ சிறிது காலத்திற்கு ஃபேஸ்புக்கிலிருந்து ஒதுங்கி இருக்க முடிவெடுத்துள்ளேன்" என்று உங்களது ஃபேஸ்புக் நண்பர்கள் அடிக்கடி பதிவிடுவதையும், ஓரிரு நாட்களில் சம்பந்தமே இல்லாத காரணத்தை கூறிவிட்டு மீண்டும் திரும்ப வருவதையும் நீங்கள் பலமுறை பார்த்திருக்கலாம்.
எனவே, மேற்குறிப்பிட்ட பல்வேறு காரணங்களினாலோ அல்லது தனிப்பட்ட வேறு காரணங்களினாலோ, உங்களுக்கும் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேற வேண்டுமென்ற எண்ணமிருந்தால், அதற்கு இரண்டு தெரிவுகள் உள்ளன.
முதலாவது, உங்களது ஃபேஸ்புக் கணக்கை தற்காலிகமாக முடக்குவது (Deactivate) செய்வது குறித்து காண்போம். நீங்கள் உங்களது கணக்கை தற்காலிகமாக முடக்கினால்,
  • மீண்டும் எப்போது வேண்டுமானாலும் திரும்ப பயன்படுத்த தொடங்கலாம்.
  • ஆனால், உங்களது கணக்கை/ பதிவை பார்க்கவோ, தேடவோ முடியாது.
  • நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகள் அப்படியே இருக்கும்.
  • உங்களது நண்பர்கள் பட்டியல் உள்ளிட்ட கணக்கு சார்ந்த விவரங்கள் அப்படியே இருக்கும்.
Presentational grey line
உங்களது கணக்கை தற்காலிகமாக நீக்குவதற்கு,
  • உங்களது ஃபேஸ்புக் கணக்கில் நுழைந்தவுடன், வலது மேல் மூலையிலுள்ள கடைசி தெரிவை தேர்ந்தெடுத்து அதில் 'செட்டிங்ஸ்' (Settings) என்பதை கிளிக் செய்யவும்.
  • அதனுள்ளே சென்றவுடன், ஜெனரல் (General) என்ற தெரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள "மேனேஜ் அக்கௌன்ட்" (Manage Account) என்பதை தேர்வு செய்யுங்கள்.
உங்களது ஃபேஸ்புக் கணக்கை தற்காலிகமாக/ நிரந்தரமாக நீக்குவது எப்படி?படத்தின் காப்புரிமைIRINA_STRELNIKOVA
  • அதில் "டீஆக்டிவேட் யுவர் அக்கௌன்ட்" (Deactivate your account) என்ற தெரிவை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களது கணக்கை தற்காலிகமாக முடக்கி விடலாம்.
  • உங்களது ஃபேஸ்புக் கணக்கை தற்காலிகமாக முடக்கினாலும், உங்களால் ஃபேஸ்புக் மெசஞ்சரை தொடர்ந்து பயன்படுத்த முடியும்; உங்களது நண்பர்களாலும் உங்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்.
"இனி ஃபேஸ்புக்கே எனக்கு வேண்டாம்" என்று முடிவெடுத்துவிட்டீர்களா? உங்களது கணக்கை எப்படி நிரந்தரமாக நீக்குவது என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்னர் அதனால் ஏற்படும் விளைவுகளை புரிந்துகொள்ளுங்கள்.
  • நீங்கள் உங்களது கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கு கோரிக்கை விடுத்தாலும் ஃபேஸ்புக் அதை உடனடியாக நிறைவேற்றுவதில்லை. கோரிக்கை விடுக்கப்பட்ட காலத்திலிருந்து, கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கு இடைப்பட்ட காலத்தில் நீங்கள் மீண்டும் உங்களது ஃபேஸ்புக் கணக்கில் உள்நுழைந்தால் உங்களது கோரிக்கையை ரத்துசெய்துவிட்டு கணக்கை மீட்டமைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
  • ஒருமுறை உங்களது ஃபேஸ்புக் கணக்கு நிரந்தரமாக நீக்கப்பட்டால் அதன் பிறகு எப்போதுமே மீண்டும் பயன்படுத்த முடியாது. அதில் பதிவிட்ட தகவல்களை பெறவும் முடியாது.
Presentational grey line
  • உங்களது கணக்கை சார்ந்த தகவல்கள் முற்றிலுமாக ஃபேஸ்புக்கின் தரவு தளத்திலிருந்து நீக்கப்படுவதற்கு 90 நாட்கள் வரை ஆனாலும் கூட, இடைப்பட்ட காலத்தில் மூன்றாம் நபர்களால் உங்களது தகவல்களை பார்க்க முடியாது.
உங்களது ஃபேஸ்புக் கணக்கை தற்காலிகமாக/ நிரந்தரமாக நீக்குவது எப்படி?படத்தின் காப்புரிமைFACEBOOK
  • நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள், உங்களது பயன்பாட்டு தகவல்கள் ஃபேஸ்புக்கின் தரவுத்தளத்தில் அப்படியே இருப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆனால், யாராலும் அந்த தகவல்களை பார்க்க முடியாது.
  • உங்களது ஃபேஸ்புக் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கு கோரிக்கை விடுத்த நாளிலிருந்து 30 நாட்கள் வரை நீங்கள் மீண்டும் உங்களது கணக்கை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பை ஃபேஸ்புக் வழங்குகிறது.
சரி, இனி உங்களது ஃபேஸ்புக் கணக்கை எப்படி நிரந்தரமாக நீக்குவது என்று அறிவோம்.
  • உங்களது ஃபேஸ்புக் கணக்கில் நுழைந்தவுடன், வலது மேல் மூலையிலுள்ள கடைசி தெரிவை தேர்ந்தெடுத்து அதில் 'செட்டிங்ஸ்' (Settings) என்பதை கிளிக் செய்யவும்.
  • அதனுள்ளே சென்றவுடன், ஜெனரல் (General) என்ற தெரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள "மேனேஜ் அக்கௌன்ட்" என்பதை தேர்வு செய்யுங்கள்.
  • அதிலுள்ள "ரிக்வஸ்ட் அக்கௌன்ட் டெலிஷன்" (Request account deletion) என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்களது கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கான கோரிக்கையை ஃபேஸ்புக்கிற்கு அளிக்க முடியும்.