அதிக தூரம் செல்லும் இடைநில்லா விமானம்




சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா செல்லும் இடைநில்லா விமான சேவையை மீண்டும் தொடங்கி உள்ளது. 

உலகிலேயே அதிக தூரம் செல்லும் இடைநில்லா விமானம் அமெரிக்காவின் நியுயோர்க் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 

அதன்படி இந்த விமானம் 17 மணித்தியாலங்களும்25 நிமிடத்தில் 15000 கிலோ மீட்டர் தூரம் பறந்து நியுயோர்க் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதிக செலவு பிடிப்பதாக இருக்கிறது என்ற காரணத்திற்காக நிறுத்தப்பட்ட இந்த விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதுவே இப்போது உலகிலேயே அதிக தூரம் பயணிக்கும் இடைநில்லா விமான சேவையாகும் .