(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண சுகாதார சேவை உதவியாளர்களுக்கான "சேவைக்கால பயிற்சியை" முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை (27) மட்டக்களப்பு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த திருகோணமலை மட்டக்களப்பு போன்ற பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட 48 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு பயிற்சி இடம்பெற்றுள்ளது.
சுகாதார சேவை உதவியாளர்களுக்கான சேவைக்கால பயிற்சியானது நோயாளர்கள் உடன் இவ்வாறு நடந்து கொள்வது வைத்தியசாலைகளை எவ்வாறு அழகுபடுத்துவது மற்றும் வைத்தியசாலை சுற்றாடலை எவ்வாறு பாதுகாப்பது குறித்தும் தாபன கோவை மற்றும் விடுமுறைகள் பற்றியும் பயிற்சி விடு முறைகள் பற்றியும் பயிற்சி செயலமர்வில் தெளிவுபடுத்தப்பட்டது.
இப்பயிற்சியினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திய நிபுணர் டாக்டர் ருதேஷன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முரலீஸ்வரன், கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் வீ.பிரேம்நாத் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தின் தாதியர் போதனாசிரியர் ஜெசிமா குத்தூஸ், திருமதி சுகிதா பாஸ்கரன் ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு இப்பயிற்சியினை நடத்தினர்.
இதேவேளை இப்பயிற்சியில் திறன்மிக்க இரண்டு ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment