மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை




20வது அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டுமானால் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 

அத்துடன் அதில் திருத்தங்கள் பல மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

மக்கள் விடுதலை முன்னணியால் சமர்பிக்கப்பட்ட 20வது அரசியலமைப்பு வரைவின் சில சரத்துக்களில் திரத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு தெரிவித்ததாக அத தெரண செய்தியாளர் கூறினார்.