அரசியல் நபர்களின் அடிப்படையில் முடிவெடுக்க இயலாது. நாங்கள் எடுக்கின்ற முடிவு சில கொள்கைகளின் அடிப்படையில் தான் எடுக்கப்பட வேண்டும்.
இன்றைக்கு நாட்டில் இரண்டு முக்கியமான விடயங்கள் நடைபெற வேண்டியுள்ளன. நாட்டிலுள்ள அனைத்து மக்களின் நலன் கருதி, ஒன்று பாராளுமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. பாராளுமன்றம் ஒரு அரசியலமைப்பு சாசன சபையாக மாற்றப்பட்டு, நாட்டிற்கு ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்று. குறித்த விடயம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அது முழுமையடைய வேண்டும். இரண்டாவது, ஐ.நா. சபைின் மனித உரிமைகள் பேரவையின் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு, குறித்த தீர்மானம் எதிர்வரும் பங்குனி மாத்திற்கு முன்னதாக நிறைவேற்றப்பட வேண்டும். அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த இரு விடயங்களும் நாட்டின் நாடு, நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களைப் பொறுத்தவரையில், முக்கியமான விடயங்கள். கருமங்களை அவதானித்து எடுக்கவேண்டிய விடயங்களை இந்த விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்படக்கூடிய வகையில் உகந்ததாக நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் அமையும். இதற்கு மேலதிகமாக தற்போது என்னால் எதையும் கூறமுடியாது. தனிக்கட்சிகளைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. இந்த இரு விடயங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் நாங்கள் அவதானித்து எங்களுடைய முடிவை எடுக்கவேண்டிய நேரத்தில் எடுப்போம் எனத் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment