கூட்டமைப்பின் தேவை பாராளுமன்றத்தை கலைப்பதே




புதிய அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார். 

நேற்று (30) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தொடர்பில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினதும் தேவையாக இருப்பதும் பாராளுமன்றத்தை கலைப்பதே என்றும் அவர் கூறியுள்ளார். 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் இரண்டு மாத காலத்திற்குள் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.