மைத்திரி - மஹிந்த இடையில் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை




தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் தன்னுடைய வீட்டில் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். 

தன்னுடைய வீட்டில் இடம்பெற்ற இரவு நேர விருந்து ஒன்றிற்கு மட்டுமே முன்னாள் ஜனாதிபதி வருகை தந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதன்போது விஷேடமான அரசியல் கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திஸாநாயக்கவின் வீட்டில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்தே அவர் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.