முன்னாள் சட்டமா அதிபர் சிப்லி அஸீஸ், இலங்கையின் சட்டத்துறை மேதைகளில் ஒருவர்





#சட்டத்தரணி #இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்

1942ல் பிறந்தவர் முன்னாள் சட்டமா அதிபர் சிப்லி அஸீஸ்.கொழும்பு றோயல் கல்லுாரியில் பயின்றவர்.பேராதனைப் பல்கலையில் சட்டப பட்டதாரியானார. பின்பு, சட்ட முதுமாணிக் கற்கை நெறியினை நிறைவு செய்தவர்.கடல்.வணிக,விமானத் துறை சட்டங்களிலும் சிறந்த அறிவு  கொண்டவர


1968ல் சட்டத்தரணியான இவர் சுமார் 30 வருட காலங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிபுரிந்து,இலங்கையின் 37 ஆவது சட்டமா அதிபராக கடமையாற்றியுள்ளார்.


இலங்கை சட்டக் கல்லுாரியின் விரிவுரையாளராக 1982-1988 வரைப் பணி புரிந்தார். சட்ட ஆணைக் குழு அங்கத்தவராக 1994-2003 வரை காத்திரமான பங்களிப்புச் செய்தவர்.  1996 ம் ஆ்ண்டளவில் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து ஓய்வு பெற்றார்.


சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து ஒய்வு பெற்ற பின் தனிப்பட்ட ரீதியாக சட்டத்தொழிலில் ஈடுபட்டார். நிர்வாகச் சட்டம்,அடிப்படை உரிமைகள், வணிகச் சட்டம் போன்றவற்றுடன தொடர்புடைய மேன்முறையீட்டு நீதிமன்றம், மீ உயர் நீதிமன்றம், கொழும்பு வணிக நீதிமன்றம் போன்றவற்றில் சிரேஸ்ட வழக்கறிஞராத் தொழில் புரிந்தார். 


இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும்  2010-2012 வரை அரும் பணியாற்றினார். சுமாரட் 15000 சட்டத்தரணிகளின் தரத்திரனை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர்த்த பாடுபட்டார். UNDP இனது அனுசனையில், கொழும்பிலும் பிற இடங்களிலுமுள்ள நீதிமன்றக் கட்டட விருத்திக்கு வித்திட்டார்.


இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து சேவையின் தவிசாளராக 2003-2005 சேவையாற்றினார்.


தமது வாதத் திறமையாலும் சட்ட நுணுக்கங்களாலும் பல வழக்குகளில் ஆஜராகி அவற்றில் தமது கட்சிக்காரர்களுக்கு வெற்றியீட்டிக் கொடுத்தார். காலத்துக்கு காலம் மாறி வரும் எந்த வொருஅரசாங்கமும் இவரது அறிவிற்கும் ஆளுமைக்கும் ஏற்ப, பல நியதி சட்ட சபைகளிலும், ஆணைக் குழுக்களிலும் முக்கிய பதவிகளை வழங்கி கௌரவித்துள்ளன.


கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் நிரவாக கட்டமைப்பின் மாற்றம் இவரது சட்ட அறிவிப் புலத்தினார சுமார் 15 நாடுகளில்  பேச்சுவார்த்தை இலங்கை அரசின் சார்பில் பேச்சுவார்ததைகளை மேற்கொண்டதன் விளைவாக புதிய பரிணாமத்துக்கு வித்திட்டது


அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் படி நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு குழுவில் சிப்லி அஸீஸ் உறுப்பினராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


தமது இன்முறுவல் புத்த முகத்துடன் என்றும்வெனக் காணப்படும் முன்னாள் சட்டமா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி, இன்று தனது 75 வது வயதில் காலமான  இலங்கை சட்த்தரணிகள் சங்க தலைவரது ஜனாசா நல்லடக்கம் கொழும்பு ஜாவத்தை மையவாடியில் இன்று மாலை இடம்பெற்றது.