அக்கரைப்பற்று கௌரவ நீதிபதியால், தென் கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு கட்டளை




தென் கிழக்குப் பல்கலைகழகத்தின் விதிகளை மீறிய மாணவர்கள் அண்மையில் பல்கலைக்கழகத்தில் விசாரிக்கப்பட்டு நிருவாகத்தினால். அவர்கெளுக்கெதிராக வகுப்புத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. 
 
இருப்பினும், அவர்களது வகுப்புத் தடையை நீக்குமாறு கோரி, ஏனைய மாணவர்கள் பலரும், தடை செய்ப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும், இன்றும் பல்லைக் கழக நிருவாக செயற்பாடுகளுக்கு இடையீடு செய்து வருவாதாக, அக்கரைப்பற்று நீதிமன்றில் பி அறிக்கையைில் பொலிசார் இன்று தெரிவித்தனர்.

பல்கலைக்கழக பதிவாளர்,மற்றும் உயர் அதிகாரி ஆகியோர், முறைப்பாட்டக்காரர்கள் சார்பில் ஆஜராகினர். 

இவ் வழக்கினை விசாரித்த அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான நீதிமன்றின் கௌரவ  நீதிபதி  பீற்றர் போல், மாணவர்கள் தமது பிரச்சினைகளை பேசித் தீரப்பதற்கான நடவடிக்ககைகளை மேற்கொள்ளுமாறு, பல்கலைக்கழக் அதிகாரிகளை வலியுறுத்தியதுடன், பல்கலைக் கழக வளாகத்திற்குள் மாணவர்கள்,தவிர ஏனையோரை வெளியேறுமாறும், பல்கலைகழக அன்றாட செயற்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் குறித்த  மாணவர்களையும் அந்த இடத்தை விட்டு வெளியறுமாறு கட்டளை பிறப்பித்ததுடன், நீதிமன்ற கட்டளைச் சேவகர் முலமாக அறிவித்தலை அங்கு ஒட்டுமாறும் பணித்தார்.