கையளிப்பு




(அப்துல்சலாம் யாசீம்)

பாலத்தோப்பூர் ஆட்டோ தரிப்பிடம் ஆட்டோச்சங்கத்திடம் கையளிப்பு! 

மூதூர் பிரதேச சபையின் ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆட்டோ  தரிப்பிடம் இன்று கையளிக்கப்பட்டது.


மூதூர் பிரதேச சபை உறுப்பினர்  பீ.டி.ஆப்தீன் அவர்களின் வேண்டுகோளிக்கினங்க மூதூர் பிரதேச சபை தவிசாளர்  எம்.எம்.ஏ.அரூஸ் அவர்களால் சபை நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 இலச்சம் ரூபாவில் அமைக்கப்பட்ட பாலத்தோப்பூர் ஆட்டோ தரிப்பிடம் ஆட்டோச்சங்கத்திடம் இன்று 06 சனிக்கிழமை  கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபை உதவி தவிசாளர் எம்.துரைநாயகம்,  உறுப்பினர்களான வஹ்ஜீத் ஆசிரியர்,வேல்மாறன்,ஜெகன் உட்பட பல ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.