(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை, சிரிமாபுற பகுதியில் காதலனுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய சம்பவம் ஒன்று இன்று (03) மூன்றாம் திகதி திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
தம்புள்ளை பகுதியில் காதலித்து வந்த காதலனுடன் தொலைபேசியில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் கோபம் கொண்ட யுவதி தூக்கில் உள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருகோணமலை, சிறிமாபுற பகுதியைச் சேர்ந்த அமாளிகா விராஐனி சொய்சா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு தூக்கில் தொங்கியதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது தனது அக்காவிடம் அம்மாவை சிறந்த முறையில் பார்த்து கொள்ளுமாறு கூறியதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் தான் காதலித்து வந்த காதலனுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கியுள்ளதாகவும் இதனை அடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி சுசில் பி.ஜி ஹேவாவிதாரண நேரில் சென்று பார்வையிட்டதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இதே வேளை விசாரணையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்
Post a Comment
Post a Comment