(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை, சர்தாபுர பொலிஸ் அதிரடி படையினர் நடாத்திய சுற்றிவளைப்பில் 4 உழவு இயந்திரங்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக விஷேட பொலிஸ் அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் பல பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அள்ளப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சுற்றி வளைப்புக்களை மேற்கொண்ட போது நான்கு இயந்திரங்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கந்தளாய் காட்டுப் பகுதியில் பாலம்பட்டாறு பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணலாறு பகுதியில் மகாவலி கங்கையில் அனுமதிப்பத்திரமின்றி மண் அகழ்வில் ஈடுபட்ட 2 பேருடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அத்துடன் மகாவலி கங்கைக்கு அருகில் சாவாறு பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாகவும் திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் உப்பு கறி மற்றும் கிண்ணியா பொலிஸ் நிலையங்களில் ஒப்படைத்ததாகவும் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment
Post a Comment