சந்தையில் வர்ணம் கலக்கப்பட்ட அரிசி வகைகள்




வர்ணம் கலக்கப்பட்ட அரிசி வகைகள் இப்போது சந்தையில் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. 

சிவப்பு அரிசிக்கு பதிலாக வர்ணம் கலக்கப்பட்ட வேறு அரிசி வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதால், மக்கள் இதுசம்பந்தமாக அவதானமாக இருக்க வேண்டும் என்று அதன் செயலாளர் மகேந்திர பாலசூரிய கூறினார். 

இது சம்பந்தமாக அத தெரண வினவிய போதே இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய இதனை கூறினார்.