ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளால் கோபமடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து கோபமாக இடையில் வெளியேறியிருந்தார்.
சதொச பொருட்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் குருணாகல் மேல் நீதிமன்றத்தினால் நேற்று (17) விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்றது.
இதில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, மஹிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் மைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.m
Post a Comment
Post a Comment