( அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியா. றகுமானியா மீனவர்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு கிண்ணியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் (இன்று 5ஆம் திகதி) தீர்வு கிடைத்துள்ளதாக கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம்.மஹ்தீ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கிண்ணியா பகுதியில்
கிண்ணியா பெரிய பாலத்திற்கு சமாந்தரமாக கடலுக்கு குறுக்காக வேலி போட்று கட்டு வலை கட்டப்படுவதனால் றகுமானியா, பெரியாற்று முனை, குறிஞ்சாக் கேனி களப்புப் பகுதி கடலுக்குள் வரும் மீன்கள் முற்று முழுதாக தடைப் படுகிறது என முறையிட்ட மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாகவும் முறையிட்டனர்.
இதனை கருத்திற்கொண்ட நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வொன்றினை மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதேவளை ரஹ்மானியா மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நகர சபை உறுப்பினரிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து இன்றைய தினம் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இதை முன்வைத்தபோது மீனவர்களின் பிரச்சினைக்கு திருகோணமலை மாவட்ட கடற்றொழில் திணைக்கள உயர் அதிகாரி உடனடியாக தீர்வு வழங்குவதாக உறுதி அளித்தார்.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு திருகோணமலை மாவட்ட கடற்றொழில் உயர் அதிகாரி விஜயம் மேற்கொண்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
Post a Comment
Post a Comment