தலவாக்கலையில்




(க.கிஷாந்தன்)
ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி தலவாக்கலை ட்ரூப் தோட்டத் தொழிலாளர்கள் 19.10.2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு உடன்படிக்கை தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்த நிலையில், ட்ரூப் தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் அணிதிரண்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக தலவாக்கலை நகருக்கு வந்து பிரதான வீதி வழியாக தலவாக்கலை மக்கள் வங்கி அருகாமை வரை சென்று மீண்டும் தலவாக்கலை நகர சுற்றுவட்டத்தை சென்றடைந்தனர்.
பதாதைகளையும், கறுப்பு கொடிகளையும் ஏந்திய வண்ணமும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.